இனிய தியாகத் திரு நாள் நல் வாழ்த்துச் செய்தியில் ஸ்டார் நெட்வேர்க் பணிப்பாளர் எ.எல்.நௌபர்...!


இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல் ஹஜ் மாதம் பிறை 10 இல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

வசதி படைத்த முஸ்லிம்கள் இஸ்லாத்தின் 5 முக்கிய கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா சென்று மார்க்க கடமைகளில் ஈடுபடுவார்கள்.

இற்றைக்கு சுமார் 4,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இறை தூதர் இப்ராஹிம் நபி அவர்களின் மனைவியான சாரா மூலம் நீண்ட காலத்தின் பின்னர், கிடைத்த ஆண் மகனான இஸ்மாயில் நபி (அலை) அவர்களை இறைக் கட்டளையின் பிரகாரம் பலியிட துணிந்த வரலாறு இதன்போது நினைவு கூறப்படுகின்றது.

நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் தமது அன்புக்குரிய மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை பலியிட துணிந்த போது, இறைவன் வானவர் ஜிப்ரி (அலை) அவர்கள் மூலம் அதனைத் தடுத்து ஒரு ஆட்டை இறக்கி வைத்து அதனை பலியிடுமாறு கட்டளையிட்டார்.

இறை தூதுவர் இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், இஸ்லாமியர்கள் புனித ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.

உலகளாவிய ரீதியில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடுகின்ற அனைத்து இஸ்லாமிய நம் உறவுகள் அனைவருக்கும் இணிய தியாகத் திரு நாள் நல் வாழ்த்துக்கள்...

எ.எல்.நௌபர்,
பணிப்பாளர்,
ஸ்டார் நெட்வேர்க்.  
 
© Star Radio Network, Sri Lanka