728x90 AdSpace

  • Latest News

    காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்டு கொலை: கண்டனங்கள் வலுக்கின்றன...!



    காஷ்மீரில் 8 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

    கடந்த ஜனவரி மாதம் காணாற்போன சிறுமி ஆசிஃபா, ஒரு வாரத்திற்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.

    சிறுமியை 8 பேர் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

    சம்பவத்துடன் தொடர்புடைய 18 வயதிற்குட்பட்ட சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    சிறுமியை வழிபாட்டுத்தலமொன்றில் மறைத்து வைத்து பல முறை வன்கொடுமைக்கு உட்படுத்தியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

    சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், குற்றச்செயல் தொடர்பில் 130 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    8 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு அமைச்சர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, நேற்று நள்ளிரவு டெல்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி ​பேரணியும் நடத்தியுள்ளார்.

    இதேவேளை, சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்படும் என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி உறுதியளித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்டு கொலை: கண்டனங்கள் வலுக்கின்றன...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top