728x90 AdSpace

  • Latest News

    காமன்வெல்த் 2018: மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்..!


    21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த விளையாட்டு 

    திருவிழாவில் 10-வது நாளான இன்றும் இந்திய அணியினரின் பதக்க அறுவடை தொடர்ந்து வருகிறது. 

    * காமன்வெல்த் போட்டியின் மகளிர் குத்துச்சண்டை 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார்.

    * காமன்வெல்த் போட்டியின் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.

    * காமன்வெல்த் போட்டியின் குத்துச் சண்டையில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் கவுரவ் சோலாங்கி தங்கம் வென்றார்.

    * காமன்வெல்த் போட்டியின் துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் தங்கம் வென்றார்.

    * காமன்வெல்த் போட்டியின் ஆண்கள் குத்துச்சண்டை 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மணீஷ் கவுசிக் வெள்ளி பதக்கம் வென்றார்.

    * காமன்வெல்த் போட்டியின் ஆண்கள் குத்துச்சண்டை 46-49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் வெள்ளி பதக்கம் வென்றார்.


    * ஆடவர் 125 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்தியாவின் ஸ்மித் தங்கம் வென்றுள்ளார். 

    * மகளிர் 50 கிலோ பிரிவு மல்யுத்தத்தில் இந்தியாவின் வினிஷ் போகத் தங்கம் வென்றார். 

    * கலப்பு ஸ்குவாஷ்  இறுதி போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லிகல்/ சவுரவ் கோஷல் தோல்வி அடைந்தது. இதன்மூலம், வெள்ளிப்பதக்கம் பெற்றது. 

    * மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஷ்வினி பொன்னப்பா ஜோடிக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

    * மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் சிங்கப்பூரின் மெங்கயு யூ என்ற வீராங்கனையை இந்தியாவின் மனிகா பத்ரா வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார். 

    இந்தப்போட்டி இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் இந்திய வீரர்களின் பதக்க வேட்டை தொடர்ந்து வருகிறது. இதன் மூலம் இந்தியா 24 தங்கம், 14
    வெள்ளி, 17 வெண்கலம் உள்பட மொத்தம் 55 பதக்கங்களுடன் 3- வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: காமன்வெல்த் 2018: மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்..! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top