728x90 AdSpace

  • Latest News

    அல்ஜீரியாவில் இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் 105 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது...!



    அல்ஜீரியாவில் இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் சுமார் 105 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    அல்ஜீரியா தலைநகருக்கு அருகே உள்ள பவ்ஃபரிக் (Boufarik) விமானத்தளத்திலிருந்து புறப்பட்ட இராணுவ விமானம் Ilyushin II-76 இன்று (புதன்கிழமை) விபத்திற்குள்ளானது.

    இந்த விபத்தில் இராணுவ விமானத்தில் பயணம் செய்த சுமார் 105 பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    விமானம் விபத்திற்குள்ளான புகைப்படங்கள் அல்ஜீரிய ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

    தொடர்ந்து மீட்புப்பணிகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: அல்ஜீரியாவில் இராணுவ விமானம் விபத்திற்குள்ளானதில் 105 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top